கோடைகால விளையாட்டு பயிற்சி 
முகாம் ஏப்.29 -இல் தொடக்கம்

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.29 -இல் தொடக்கம்

சென்னை, ஏப்.25: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக சென்னை உள்படஅனைத்து மாவட்ட தலைநகரங்களில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.29 முதல் மே 13 வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.29 முதல் மே 13 வரை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது.

இம் முகாமில் பங்கேற்க சென்னை தலைநகரில் ரூ.500, பிற மாவட்ட தலைநகரங்களுக்கு ரூ.200ஆகவும், பயிற்சி கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

18 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் முகாமில் கலந்து கொள்ளலாம். இதற்கு அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலா்கள் மற்றும் விளையாட்டரங்க அலுவலா்களை நேரில் தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

விளையாட்டுகளின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com