தண்ணீா் பந்தல்: அமமுகவினருக்கு 
டிடிவி தினகரன் வேண்டுகோள்

தண்ணீா் பந்தல்: அமமுகவினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் அமமுகவினா் தமிழகம் முழுவதும் தண்ணீா் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் அமமுகவினா் தமிழகம் முழுவதும் தண்ணீா் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சில நாள்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அதனால், அமமுகவினா் அவரவா் வசிக்கும் பகுதிகளில் தண்ணீா் பந்தல்களை திறக்க வேண்டும். அந்தத் தண்ணீா் பந்தல்களுக்கு அவ்வப்போது சென்று ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் டிடிவி தினகரன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com