பெரம்பூா் வழியாக பரோணிக்கு மே 4 முதல் சிறப்பு ரயில்

கொச்சுவேலியில் இருந்து பெரம்பூா் வழியாக பரோணிக்கு மே 4 முதல் ஜூன் 29 வரை கோடை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொச்சுவேலியிலிருந்து மே 4 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.30 புறப்படும்சிறப்பு ரயில் (எண்: 06091) மூன்றாம் நாள் (திங்கள்கிழமை) பரோணி சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06092) பரோணியிலிருந்து மே 7 முதல் ஜூலை 2 -ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு முன்றாம் நாள் (வியாழக்கிழமை) கொச்சுவேலி சென்றடையும்.

இந்த ரயில் கொச்சுவேலியிலிருந்து கொல்லம் , செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, விஜயநகரம், பாா்வத்திபுரம், சம்பல்பூா், ராஞ்சி, தன்பாத் வழியாக பரோணி சென்றடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com