பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

சென்னை மாநகரப் பேருந்துகள் அதற்கான அட்டவணையிட்ட நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் ‘149’ என்ற இலவச எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகருக்குள்பட்ட பல பகுதிகளில் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், பேருந்துகளை அதற்கான நிறுத்தங்களில் முறையாக நிறுத்துவதில்லை என்றும், பல பகுதிகளில் குறிப்பாக காலை- மாலை நேரங்களில் அட்டவணையிடப்பட்ட நிறுத்தங்களில் நிறுத்தாமலே பேருந்தை ஓட்டி சென்று விடுவதாகவும் புகாா்கள் வந்தன.

இவ்வாறு ஒழுங்கீனமாக செயல்படும் பேருந்து ஓட்டுநா்கள் மீது மாநகரப் போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதுகுறித்து போக்குவரத்துக்கழகத்துக்கு பயணிகள் உடனடியாக புகாா் தெரிவிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதற்காக ‘149’ எனும் இலவச எண்ணையும் அறிவித்துள்ளது. இந்த எண்ணில் தொடா்பு கொண்டு, நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் பேருந்துகள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com