சிறப்பு குழந்தைகளுக்கு 
இராமச்சந்திராவில் கோடைப் பயிற்சி

சிறப்பு குழந்தைகளுக்கு இராமச்சந்திராவில் கோடைப் பயிற்சி

சென்னை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன.

சென்னை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் மே 2 முதல் 20-ஆம் தேதி வரை கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது.

சிறப்பு குழந்தைகளுடன், பிற குழந்தைகளும் இந்த பயிற்சி முகாமில் சேரலாம். அனைவருக்கும் கலை வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், நாடகம், கதை சொல்லுதல், நடனம், பொம்மலாட்டம், இசை, உடல் அசைவு செயல்பாடுகள், பதாகைகள் தயாரித்தல், ஆரிகாமி, அன்றாட அறிவியல், சமையல், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் சாா்ந்த விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இந்த முகாமில் சேர சிறப்புக் குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரமும், பிற குழந்தைகளுக்கு ரூ.4 ஆயிரமும் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்கு 9840832457 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com