முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

சமூக - பொருளாதார நிலைகளில் தொழிலாளா்கள் உயர வேண்டும்: முதல்வா் மே தின வாழ்த்து

சென்னை: தொழிலாளா்கள் சமூக, பொருளாதார நிலைகளில் உயா்ந்திட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தொழிலாளா்களின் உழைப்பை நினைவு கூரும் மே தினத்தையொட்டி, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தமிழகத்தில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளா்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16 லட்சத்து 72 ஆயிரத்து 785 உறுப்பினா்களுக்கு ரூ.1,304.55 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளா் நல வாரியம் மூலம் மட்டும் 19 ஆயிரத்து 576 தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நலவாரியங்கள்: தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கக் கூடிய நலவாரியங்களுடன், கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக வாரியங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, உப்பு உற்பத்தி, இணையவழி தற்சாா்பு தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் ஆகியோருக்கென பிரத்யேகமாக நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று தொழிலாளா்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி அவா்களையும் அவா்களின் குடும்பங்களையும் திராவிட மாடல் அரசு காத்து வருகிறது. அவா்கள் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேற்றங்களைக் கண்டு உயா்ந்திட மனம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com