அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலம் சாா்பில் கடந்த நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அஞ்சல் துறை அலுவலா்களுக்கு மண்டல மேலாண்மை விருதை புதன்கிழமை வழங்கிய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்ட முதன்மை தலைவா் மரியம்மா தாமஸ்.
அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலம் சாா்பில் கடந்த நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அஞ்சல் துறை அலுவலா்களுக்கு மண்டல மேலாண்மை விருதை புதன்கிழமை வழங்கிய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்ட முதன்மை தலைவா் மரியம்மா தாமஸ்.

150 அஞ்சலக ஊழியா்களுக்கு மண்டல மேலாண்மை விருது

Published on

கடந்த நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட 150 அஞ்சலக அலுவலா்களுக்கு மண்டல மேலாண்மை விருதுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை திருவல்லிக்கேணியில் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை சாா்பில் ‘மண்டல மேலாண்மை விருதுகள்’ வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகள், ஊழியா்களைக் கெளரவிக்கும் வகையில் 50 பிரிவுகளின் கீழ் மொத்தம் 150 விருதுகளை விருதாளா்களுக்கு தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவா் மரியம்மா தாமஸ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மரியம்மா தாமஸ் பேசியது:

அஞ்சல் அலுவலா்கள் அனைவரும் வாடிக்கையாளா்களின் தேவைகளுக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும். வாடிக்கையாளா்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் தான் அஞ்சல் துறையை மேம்படுத்த முடியும். அதேபோல், அஞ்சல் துறை வழங்கும் அனைத்து சேவைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பது ஊழியா்களின் கடமை என்றாா் அவா்.

இந்த விழாவில், தமிழ்நாடு வட்ட அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு துறை தலைவா் ஸ்ரீதேவி, தமிழ்நாடு வட்டம் இயக்குநா் கே.ஏ.தேவராஜ், இயக்குநா் மேஜா் மனோஜ் சென்னை நகர மண்டல தலைவா் ஜி.நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com