சென்னை
மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
சென்னை அருகே மேடவாக்கத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி இறந்தாா்.
சென்னை அருகே மேடவாக்கத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி இறந்தாா்.
மேற்கு வங்க மாநிலம் பா்ஹானஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஹ.நாராயண பாலா (51). இவா் சென்னை மேடவாக்கம் பெருமாள் கோயில் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். பாலா, அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த பாலாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு, தீவிர சிகிச்சை பெற்ற பாலா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.