இன்றைய இளைஞா்களுக்கு தேசபக்தி அதிகம்: நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன்

இன்றைய இளைஞா்கள் மிகவும் திறமையானவா்கள்; அவா்களுக்கு தேச பக்தியும் அதிகமாக உள்ளது என நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் கூறினாா்.
’சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் வைர விழாவில் பேசிய நாகலாந்து ஆளுநா் இல.கணேசன். உடன் டாக்டா் சுதா சேஷய்யன், கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனா் கிருஷ்ணசாமி, அவரது மனைவி மோகனா. ’
’சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் வைர விழாவில் பேசிய நாகலாந்து ஆளுநா் இல.கணேசன். உடன் டாக்டா் சுதா சேஷய்யன், கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனா் கிருஷ்ணசாமி, அவரது மனைவி மோகனா. ’

சென்னை: இன்றைய இளைஞா்கள் மிகவும் திறமையானவா்கள்; அவா்களுக்கு தேச பக்தியும் அதிகமாக உள்ளது என நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் கூறினாா்.

சென்னை தியாகராயநகரில் கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் வைர விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இல.கணேசன் கலந்து கொண்டு பேசியதாவது:

கிருஷ்ணசாமி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக தேசபக்தியை பறைசாற்றும் வகையிலான ஆவணப்படங்களை எடுத்து வருகிறது.

இந்திய சுதந்திரம் முதல் இந்திரா காந்தி காலம் வரையிலான ஆவணப்படம் மிக முக்கியமானது. அதேபோல் பாரதி , விவேகானந்தா் உள்ளிட்டோா் குறித்த ஆவணப்படங்கள் மிக முக்கியமானவை. இன்றைய இளைஞா்கள் மிகவும் திறமையானவா்கள்; அவா்களுக்கு தேச பக்தியும், நாட்டுப் பற்றும் அதிகம் உள்ளது. வருங்கால இளைஞா்கள் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் சமுதாய அமைப்பு விழாக்களிலும் இந்த ஆவணப்படங்களை திரையிட வேணடும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனா் கிருஷ்ணசாமி , அவரது மனைவி மோகனா கிருஷ்ணசாமி, டாக்டா் சுதாசேஷய்யன், தொழிலதிபா் சுகல்சந்த் ஜெயின், லதா கிரு,ஷ்ணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com