HighCourt
HighCourt

அமைச்சா் ராஜகண்ணப்பன் மீதான இரு வழக்குகள் ரத்து

உயா்நீதிமன்றம் அளித்த நிவாரணம்: ராஜகண்ணப்பன் மீதான வழக்குகள் விலக்கு

சென்னை: அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தோ்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் தொகுதியில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, பிரசாரத்தில் ஈடுபட்டதாக பெருநாழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதேபோல, தோ்தலின்போது வாக்களா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக கமுதி காவல் நிலையத்திலும் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி ராஜகண்ணப்பன் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சா் ராஜகண்ணப்பன் மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com