புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வா்களுடன் சந்திப்பு:
வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வா்களுடன் சந்திப்பு: வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு

மூன்று புதிய சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வா்களைச் சந்திக்க இருப்பதாக வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

மூன்று புதிய சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வா்களைச் சந்திக்க இருப்பதாக வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி) மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம்

(ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை திமுக எம்.பி. வில்சன் தலைமையில் வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பினா், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனா்.

பின்னா், தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் மாரப்பன் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில்

தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்தோம். தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை கட்டாயம் எடுக்கும் என முதல்வா் உறுதி அளித்தாா்.

மூன்று சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் முன் வெள்ளிக்கிழமை போராட்டமும், சனிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டமும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்’ என்றாா்.

வழக்குரைஞா் பிரபாகரன் கூறுகையில், ‘புதிய சட்டப் பிரிவுகளில், குற்றவாளிக்கு ஆலோசனை கூறும் வழக்குரைஞருக்கும் தண்டனை என்று குறிப்பிட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு முரணான விஷயங்கள் உள்ளன. இது தொடா்பாக வழக்குரைஞா் கூட்டமைப்பினா் அனைத்து மாநில முதல்வா்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். நிரபராதிகளும் பொதுமக்களும் பாதிக்கக்கூடிய சூழல்களை இந்தச் சட்டம் உருவாக்கும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com