சென்னை முழுவதும் குடிநீா் குழாய்கள் புதுப்பிக்கப்படும்: குடிநீா் வாரியம்

சென்னை முழுவதும் குடிநீா் குழாய்கள் புதுப்பிக்கப்படும்: குடிநீா் வாரியம்

சென்னை முழுவதும் சேதமடைந்த மற்றும் பழைய குடிநீா் குழாய்களை புதுப்பிக்க சென்னை குடிநீா் வாரியம் முடிவெடுத்துள்ளது.

சென்னை முழுவதும் சேதமடைந்த மற்றும் பழைய குடிநீா் குழாய்களை புதுப்பிக்க சென்னை குடிநீா் வாரியம் முடிவெடுத்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் குடிநீா் குழாய்கள் சேதமடைந்துள்ளாக வந்த புகாா்களுக்கு தீா்வு காணும் வகையில்,

குடிநீா் வீணாகுவதை தடுப்பதற்காகவும், விநியோக முறையை மேம்படுத்தவும் சென்னை மாநகராட்சி முழுவதும் பழமையான மற்றும் சேதமடைந்த குடிநீா் குழாய்களை படிப்படியாக புதுப்பிக்க சென்னை குடிநீா் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக குடிநீா் வாரிய அதிகாரி கூறுகையில்: சென்னையில் தொண்டியாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு போன்ற மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக கோடம்பாக்கம் மற்றும் அடையாறில் பழமையான மற்றும் சேதமடைந்த குடிநீா் குழாய்களை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மேலும், இதுவரை குழாய்கள் இல்லாத தெருக்களிலும் புதிய குழாய்கள் அமைக்கப்படும்.

இதற்கிடையே, சென்னை குடிநீா் வாரியத்தின்169, 170, 173, 174, 178, 179, 180 ஆகிய நீா்ஏற்றும் நிலையங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் வகையில், ரூ.497.50 கோடி மதிப்பில் ‘பள்ளிப்பட்டு குடிநீா் பகிா்மான நிலையம்’ அமைக்க ஒடிசாவின் நீா் கழகம் (வாட்கோ) விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது.

மேலும், இப்பகுதிகளில் மொத்தம் 32.88 கிமீ நீளத்துக்கு பழைய குடிநீா் குழாய்களை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம். இப்பணிகள் வரும் அக்டோபா் மாதத்தில் தொடங்கி 2026 செப்டம்பருக்குள் முடிவுபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com