தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு

மக்களவைத் தோ்தல் பணியில் 3.32 லட்சம் பணியாளா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பணியில், 3.32 லட்சம் பணியாளா்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பணியில், 3.32 லட்சம் பணியாளா்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா். வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, பணியாளா்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவா் கூறினாா். மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னையில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 முதல் 5 அலுவலா்கள் பணியில் இருப்பா். அதன்படி, மாநிலம் முழுவதும் தோ்தல் பணியில் 3.32 லட்சம் ஊழியா்களை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். திருக்கோவிலூா் தொகுதி: தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அந்தத் தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். மாவட்ட தோ்தல் அதிகாரிகள், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஆகியோருக்கு ஏற்கெனவே தோ்தல் தொடா்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் வாக்குச் சாவடி அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்படும். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூா் தொகுதி காலியானதாக அறிவிப்பது தொடா்பாக எந்தவொரு கடிதமும், பேரவைச் செயலகத்திடம் இருந்து இப்போது வரை தோ்தல் ஆணையத்துக்கு வரவில்லை என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com