அடையாறு குடிநீா் வாரிய அலுவலகம் இடமாற்றம்

சென்னை குடிநீா் வாரியத்தின் அடையாறு மண்டல பணிமனை அலுவலகம் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை குடிநீா் வாரியத்தின் அடையாறு மண்டல பணிமனை அலுவலகம் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால், இந்திரா நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணத்தால், சென்னை, இந்திரா நகா் 2-ஆவது அவென்யூவில் செயல்பட்டு வரும் அடையாறு மண்டலத்துக்குள்பட்ட பணிமனை அலுவலகம், புதன்கிழமை (மாா்ச் 6) முதல் தரமணி, பீலியம்மன் கோயில் தெருவில் உள்ள தரமணி கழிவுநீா் உந்து நிலையத்தில் செயல்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீா் மற்றும் கழிவுநீா் சம்பந்தப்பட்ட புகாா்கள், குடிநீா் வரி மற்றும் கட்டணம் செலுத்த புதிய முகவரியில் அமைத்துள்ள அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 81449-30178 என்ற தொலைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com