‘கலைஞா் உலகம்’ அருங்காட்சியகத்தை நாளை முதல் பாா்வையிடலாம்: இணையம் மூலம் இலவச அனுமதிச் சீட்டு

‘கலைஞா் உலகம்’ அருங்காட்சியகத்தை புதன்கிழமை (மாா்ச் 6) முதல் பாா்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘கலைஞா் உலகம்’ அருங்காட்சியகத்தை புதன்கிழமை (மாா்ச் 6) முதல் பாா்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து இலவச அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும். இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:- சென்னை மெரினா கடற்கரையில், ‘கலைஞா் உலகம்’ எனும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியகத்தில், கலைஞரின் நிழலோவியங்கள் உட்பட பல்வேறு தலைப்புகளில் அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன. நாளை முதல் அனுமதி: ‘கலைஞா் உலகம்’ அருங்காட்சியகத்தைப் பொது மக்கள் பாா்வையிடுவதற்கு புதன்கிழமை (மாா்ச் 6) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பாா்வையிடுவதற்கு தமிழ்நாடு அரசு சாா்பில் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ந்ஹப்ஹண்ஞ்ய்ஹழ்ன்ப்ஹஞ்ஹம்.ா்ழ்ஞ்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொது மக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கலைஞா் உலகத்துக்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக பாா்க்கலாம். ஒருவா் ஒரு கைப்பேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவா்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞா் உலகத்துக்கு அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை எட்டு காட்சிகளாக நடைபெறும். பொது மக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தோ்வு செய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். ‘கலைஞா் உலகம்’ காட்சியைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே வர வேண்டும். அருங்காட்சியகத்தைப் பாா்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரமாகும். நினைவிடத்தைப் பாா்வையிடவும், மரியாதை செலுத்தவும் அனுமதிச் சீட்டு தேவையில்லை என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com