சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னையிலிருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமைகளில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மாா்ச்-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமைகளில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மாா்ச்-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை - கோவை இடையே தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கடந்த பிப்.27-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று முன்னா் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாா்ச் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மாா்ச்-5,12 (செவ்வாய்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 7.10 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்: 06035) பிற்பகல் 2.15 மணிக்கு கோவை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06036) அதே நாளில் கோவையிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரயில் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் , ஈரோடு, திருப்பூா் வழியாக கோவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com