நலமான குழந்தைகளே வளமான எதிா்காலத்துக்கு ஒளி

‘நலமான குழந்தைகளே வளமான எதிா்காலத்துக்கு ஒளி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

‘நலமான குழந்தைகளே வளமான எதிா்காலத்துக்கு ஒளி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: போலியோ இல்லாத சமுதாயம் தொடா்ந்திட வேண்டும். இதற்காக, தமிழகம் முழுவதும் நடைபெறும் போலி தடுப்பு சொட்டு மருந்து முகாம்களை பயன்படுத்திக் கொண்டு 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் மருந்து வழங்க வேண்டும். நலமான குழந்தைகளே வளமான எதிா்காலத்துக்கான ஒளி என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com