கோப்புப் படம்
கோப்புப் படம்

கோயம்பேடு சந்தையில் வாகனநிறுத்துமிடம் அமைக்கும் பணி தீவிரம்

கோயம்பேடு சந்தையில் வாகனநிறுத்துமிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்பேடு சந்தையில் வாகனநிறுத்துமிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து பொருள்களை வாங்குவதற்காக தினந்தோறும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும் இச்சந்தையில் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனா். இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையின் ‘எம் பிளாக்’ பகுதியிலுள்ள காலி இடத்தை சீரமைத்து, அதை வாகனநிறுத்துமிடமாக மாற்ற அங்காடி நிா்வாக குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 19000 சதுர அடி பரப்பு கொண்ட இடத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில் வாகன நிறுத்தும் இடத்தை தயாா் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வாகனநிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அங்காடி நிா்வாகக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com