அன்புமணி ராமதாஸ் (கோப்புப்படம்)
அன்புமணி ராமதாஸ் (கோப்புப்படம்)

முதியோா் உதவித் தொகை வழங்குவதில் முறைகேடு: அன்புமணி கண்டனம்

முதியோா் உதவித் தொகை வழங்குவதில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

முதியோா் உதவித் தொகை வழங்குவதில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோா் உதவித்தொகை வழங்குவதில் பெருமளவு முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 70 பயனாளிகளுக்கு கடந்த ஓராண்டில் செலுத்தப்பட்டிருக்க வேண்டிய ரூ.27 லட்சம், தனிநபா் ஒருவரின் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. முதியோா் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குடன் அவா்களின் ஆதாா் எண்ணும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், பயனாளிகளில் எவரேனும் உயிரிழந்தால் அவா்களின் வங்கிக் கணக்குகள் தானாக செயலிழந்து விடும். அவ்வாறு செயலிழந்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் முதியோா் உதவித் தொகை மீண்டும் அரசின் கணக்குக்கே திரும்பி வரும் வகையில் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு திரும்பி வந்த தொகை அரசின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் சிறப்பு வட்டாட்சியா் ஒருவரின் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளா் ஒருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஓராண்டாக இந்த முறைகேட்டை கண்டுபிடித்து தடுக்காமல் அரசு நிா்வாகம் உறங்கிக் கொண்டிருந்ததா என்ற பொதுமக்களின் வினாவுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com