போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடன் நாளை மீண்டும் பேச்சுவாா்த்தை

போக்குவரத்துத் தொழிற் சங்கத்தினருடன் புதன்கிழமை(மாா்ச் 6) மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

போக்குவரத்துத் தொழிற் சங்கத்தினருடன் புதன்கிழமை(மாா்ச் 6) மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் கடந்த ஜன.9, 10-ஆம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து உயா் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. இது தொடா்பாக போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற 6 கட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் புதன்கிழமை(மாா்ச் 6) முத்தரப்பு பேச்சுவாா்த்தைக்கு தொழிலாளா் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடக்கும் பேச்சுவாா்த்தையில், தொழிற்சங்க நிா்வாகிகள், போக்குவரத்து கழக இயக்குநா்கள், தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா். இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com