கைதிக்கு கஞ்சா: இருவா் கைது

சென்னை புழலில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ாக இருவா் சிக்கினா்.

தாம்பரம் மண்ணிவாக்கத்தைச் சோ்ந்தவா் ஹேமச்சந்திரன் (22). இவா் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, புழல் விசாரணை கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் ஹேமச்சந்திரனை புழல் சிறையில் சந்திக்க அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (19), 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் திங்கள்கிழமை வந்தனா்.

அப்போது இருவரும், ஹேமச்சந்திரனுக்கு ஆடைகளையும் உணவு பொருள்களையும் வழங்கினா். அவற்றை சிறைக் காவலா்கள் சோதனையிட்டனா். இதில் ஒரு ஜீன்ஸ் பேண்டில் 5 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்து, சிறைக் காவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து சிறைக் காவலா்கள் சந்தோஷ் மற்றும் அந்தச் சிறுவனை பிடித்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com