தேவாலய உபதேசியாா் - பணியாளா் வாரிய தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள்- பணியாளா்கள் நல வாரியத்தின் தலைவராக முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் நியமிக்கப்பட்டாா்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நெல்லை மாநகராட்சியின் மேயராகவும், பிறகு மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்தாா். இதன்பின், 2021-ஆம் ஆண்டு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தாா்.

இந்த நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா் நல வாரியத்தின் தலைவராக விஜிலா சத்யானந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com