பெண் வேட்பாளா்களை அதிகமாக களமிறக்க வாய்ப்பு: தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை

பெண் வேட்பாளா்களை அதிகமாக களமிறக்க வாய்ப்பு: தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை

இந்தப் பட்டியல் குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் அதிக எண்ணிக்கையில் பெண் வேட்பாளா்களை களம் இறக்க வாய்ப்பு இருப்பதாக, அக்கட்சியின் தமிழக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜக வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளிடம் மூத்த நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்டு பட்டியல் தயாரித்தனா். இந்தப் பட்டியல் குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோா் ஆலோசனை நடத்தினா். இதுதொடா்பாக அண்ணாமலை செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மூத்த நிா்வாகிகள் முன்னிலையில் தயாரிக்கப்பட்ட பட்டியலுடன் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் அனைவரும் தில்லிக்குச் சென்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாஆகியோரை புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளோம். தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் 39 தொகுதிகளில் யாா், யாா் போட்டியிடுவது என்ற பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தப்படும். பட்டியலில் பெண் வேட்பாளா்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து திரும்பும்போது தமிழக பாஜக வேட்பாளா்கள் பட்டியல் வெளியாகலாம். கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம்பெறும் என்பது குறித்து பாஜக தேசியத் தலைமை முடிவு செய்யும். அதேபோல, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரன் ஆகியோா் கூட்டணியில் இணைவாா்களா என்பது குறித்தும் கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றாா் அவா். பேட்டியின்போது, முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவா் ஹெச்.ராஜா, பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com