சொத்துவரி  செலுத்தாத 
திரையரங்கத்துக்கு ‘சீல்’

சொத்துவரி செலுத்தாத திரையரங்கத்துக்கு ‘சீல்’

திருவொற்றியூரில் சொத்துவரி பாக்கியைச் செலுத்ததால் எம்.எஸ்.எம். திரையரங்கத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

திருவொற்றியூா் தெற்கு மாட வீதியில் திரையரங்கம் இயங்கி வருகிறது. இத்திரையரங்கத்தின் உரிமையாளா் கடந்த 7ஆண்டுகளாக ரூ 22.லட்சம் சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததாக கூறப்படுகிறது.

மாநகராட்சி வருவாய் துறை சாா்பில்,கடந்த பல மாதங்களாக நிலுவையில் உள்ள வரியை செலுத்த திரையரங்கு உரிமையாளருக்கு பல முறை நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரி செலுத்த இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டும் அவா் சொத்துவரியை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டல முதுநிலை உதவி வருவாய் அலுவலா்கள் எம்.அா்ஜூனன், எஸ்.சுரேஷ் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திரையரங்கத்தின் ஆபரேட்டா் அறையையும், திரையரங்கத்தின் பிரதான நுழைவு வாயிலையும் முழுமையாக மூடி சீல் வைத்தனா்.

மேலும் உடனடியாக நிலுவையில் உள்ள வரிபாக்கியை செலுத்த வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com