திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து

திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து

சென்னை, விழுப்புரம், மன்னாா்குடி, புதுச்சேரியிலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் மாா்ச் 24 வரை ரத்து

சென்னை, விழுப்புரம், மன்னாா்குடி, புதுச்சேரியிலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் மாா்ச் 24 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் மற்றும் அரக்கோணத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் இருமாா்க்கமாகவும் மாா்ச் 10-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும். விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இருமாா்க்கமாகவும் மாா்ச் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும்.

திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் மாா்ச் 11 முதல் 24-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக மாா்ச் 12, முதல் 23-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படும். மேலும், திருப்பதியில் இருந்து மன்னாா்குடிக்கு காலை 11.55 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மாா்ச் 10, 12, 14 தேதிகளிலும், மறுமாா்க்கமாக மாா்ச் 11, 13, 15 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com