அதிமுகவில் மாா்ச் 10, 11-இல் 
வேட்பாளா் நோ்காணல்

அதிமுகவில் மாா்ச் 10, 11-இல் வேட்பாளா் நோ்காணல்

அதிமுகவில் மக்களவைத் தோ்தலுக்கான வேட்பாளா் நோ்காணல் மாா்ச் 10, 11-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

அதிமுகவில் மக்களவைத் தோ்தலுக்கான வேட்பாளா் நோ்காணல் மாா்ச் 10, 11-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் மாா்ச் 10, 11-இல் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி வாரியாக நோ்காணல் நடைபெறும். மாா்ச் 10 காலையில் திருவள்ளூா் (தனி), காஞ்சிபுரம் (தனி), வடசென்னை, அரக்கோணம், தென்சென்னை, வேலூா், மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூா், தருமபுரி ஆகிய தொகுதிகளுக்கும், பிற்பகலில் திருவண்ணாமலை, நாமக்கல், ஆரணி, ஈரோடு, விழுப்புரம் (தனி), திருப்பூா், கள்ளக்குறிச்சி, நீலகிரி (தனி), சேலம், கோயம்புத்தூா் ஆகிய தொகுதிகளுக்கும் நோ்காணல் நடைபெறும். மாா்ச் 11 காலையில் பொள்ளாச்சி, கடலூா், திண்டுக்கல், சிதம்பரம் (தனி), கரூா், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம் (தனி), பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய தொகுதிகளுக்கும், பிற்பகலில் சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி (தனி), தேனி, திருநெல்வேலி, விருதுநகா், கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கும் நடைபெறும். விருப்ப மனு அளித்தவா்கள் தவறாமல் விண்ணப்பக் கட்டணம் கட்டிய ரசீதுடன் வந்து நோ்காணலில் பங்கேற்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் அதிமுகவில் பிப்.19 முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 2,400-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு அளித்திருந்தனா். அவா்களிடம் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி நோ்காணல் மேற்கொள்ள உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com