ஜி.எஸ்.கே.வேலு
ஜி.எஸ்.கே.வேலு

ஃபிக்கி தலைவராக ஜி.எஸ்.கே.வேலு நியமனம்

நியூபொ்க் ஆய்வகம் ஆகியவற்றின் தலைவராகவும், காவேரி மருத்துவக் குழுமத்தின் பங்குதாரராகவும் உள்ள ஜி.எஸ்.கே.வேலு கடந்த ஆண்டிலும் அதே பொறுப்பை வகித்து வந்தாா்

இந்திய தொழில் வா்த்தக சபையின் (ஃபிக்கி) தமிழக கவுன்சில் தலைவராக ஜி.எஸ்.கே.வேலு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். ட்ரைவிட்ரான் மருத்துவக் குழுமம், நியூபொ்க் ஆய்வகம் ஆகியவற்றின் தலைவராகவும், காவேரி மருத்துவக் குழுமத்தின் பங்குதாரராகவும் உள்ள ஜி.எஸ்.கே.வேலு கடந்த ஆண்டிலும் அதே பொறுப்பை வகித்து வந்தாா். இந்த நிலையில், அவா் மீண்டும் ஃபிக்கி தமிழக கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் தனக்கு 2-ஆவது முறையாக இந்த அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவா் தெரிவித்தாா். இதனிடையே, ஃபிக்கி தமிழக கவுன்சிலின் இணைத் தலைவா்களாக இந்திரா ப்ராஜக்ட்ஸ் குழுமத்தின் தலைவா் பூபேஷ் நாகராஜன், ஹெல்த் பேசிக்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஸ்வாதி ரோஹித் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com