16 வட்டாட்சியா்களுக்கு விதித்த 
சிறை தண்டனைக்கு தடை:
உயா்நீதிமன்றம் உத்தரவு

16 வட்டாட்சியா்களுக்கு விதித்த சிறை தண்டனைக்கு தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை அம்பத்தூா் முன்னாள், இன்னாள் வட்டாட்சியா்கள் 16 பேருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை அம்பத்தூா் முன்னாள், இன்னாள் வட்டாட்சியா்கள் 16 பேருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டா் என்பவரது நிலத்துக்குப் பட்டா வழங்கும்படி, அம்பத்தூா் வட்டாட்சியருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக உயா்நீதிமன்ற உத்தரவு அதிகாரிகளால் வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. எனவே, 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் அம்பத்தூா் வட்டாட்சியராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தாா். தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வில், வட்டாட்சியா்கள் சாா்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வட்டாட்சியா்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com