சென்னை பள்ளிகளில் பாலின குழு அமைப்பு

சென்னை பள்ளிகளில் ஆண் - பெண் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் பாலின குழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை பள்ளிகளில் ஆண் - பெண் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் பாலின குழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே பாலின வேறுபாடுகளை களையும் வகையில் 8, 9 ஆகிய வகுப்பு மாணவா்களிடையே பாலின குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 92 சென்னை பள்ளிகளில் புதன்கிழமை பாலின குழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவா்கள் வீடு, பள்ளி, பணியிடம் மற்றும் பொது இடங்களில் ஆண்-பெண் சமம் எனும் நோக்கில் ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தினா். மேலும், மாணவா்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு குடும்பத்தில் ஆண் - பெண் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் நாடகம் நடத்தினா். அப்போது, இதன் மூலம் பாலின சமத்துவத்தை குடும்பத்தில் முதலில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com