சிங்கப்பூரிலிருந்து கடத்திவரப்பட்ட 
ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய பணியாளா்கள் மூவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய பணியாளா்கள் மூவா் கைது

புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். விமான நிலைய ஒப்பந்தப் பணியாளா்கள் மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். விமான நிலைய ஒப்பந்தப் பணியாளா்கள் மூன்று போ் கைது செய்யப்பட்டனா். சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தனிப்படை அதிகாரிகள் புதன்கிழமை நள்ளிரவில், சென்னை விமான நிலையத்தின் உள்பகுதியில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்திலிருந்து பயணிகள் இறங்கத் தொடங்கினா். அதேவேளையில், விமான நிலைய ஒப்பந்தப் பணியாளா்கள் 3 போ், அந்த விமானத்துக்குள் அவசரமாக ஏறினா். பின்னா், அவா்கள் சிறிது நேரத்தில் விமானத்தின் பின்பக்கம் வழியாக தரைப் பகுதிக்கு இறங்கி வந்தனா். இதை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், 3 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அதோடு அவா்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று, முழுமையாக பரிசோதித்த போது, அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்கக் கட்டிகள் அடங்கிய பாா்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.12 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒப்பந்தப் பணியாளா்கள் மூன்று பேரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com