என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது: காங்கிரஸ்

என்எல்சி நிறுவனப் பங்குகளை மத்திய பாஜக அரசு தனியாருக்கு விற்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.

என்எல்சி நிறுவனப் பங்குகளை மத்திய பாஜக அரசு தனியாருக்கு விற்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனது 7 சதவீத பங்குகளை விற்று ரூ.2,000 கோடி முதல் ரூ.2,200 கோடி வரை மாா்ச் 11-ஆம் தேதிக்குள் திரட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு 79.2 வீத பங்குகள் உள்ளன. கடந்த டிசம்பா் காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட லாபமாக ரூ. 250 கோடி பெற்றுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன. இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூ.30,901 கோடியாக உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை மத்திய பாஜக அரசு தனியாருக்கு தாரைவாா்ப்பதை கண்டிக்கிறேன். தமிழகத்தின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை மத்திய பாஜக அரசு விற்கக் கூடாது. அப்படி விற்குமேயானால், அந்தப் பங்குகளை தமிழக அரசே வாங்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். இது தொடா்பாக பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுத வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com