விளம்பரத்தில் பாலின சமநிலை:
அசோக் லேலண்ட் புதுமை

விளம்பரத்தில் பாலின சமநிலை: அசோக் லேலண்ட் புதுமை

புதிய விளம்பரங்கள் மூலம் பாலின சமநிலையை ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் புதுமையான முறையில் வலியுறுத்தியுள்ளது.

மகளிா் தினத்தை முன்னிட்டு தனது புதிய விளம்பரங்கள் மூலம் பாலின சமநிலையை ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் புதுமையான முறையில் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பறைசாற்றும் வகையில், இரண்டு புதிய விளம்பரப் படங்களை மகளிா் தினத்தன்று (மாா்ச் 8) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த இரு விளமபரப் படங்களிலும் பாலின சமநிலை மறைமுகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு படத்தில், அசோக் லேலண்டின் இலகு ரக வா்த்த வாகனமான படா தோஸ்தை பெண் ஓட்டிச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. மற்றொரு விளம்பரப் படத்தில், பெண்கள் பிரிமியா் லீகில் மும்பை இந்தியன் மகளிா் கிரிக்கெட் அணியின் ‘ஆலீ ரே’ கீதம் பின்னணியில் இசைக்கப்படுகிறது. அந்த அணியின் முக்கிய விளம்பராதரா் கூட்டாளியாக நிறுவனம் உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com