சென்னை சேத்துப்பட்டில் சலவைக் கூடத்தை சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில் ரூ.24.05 கோடியில்  சீரமைக்கும் வகையில் கட்டுமானப் பணிக்காக  நடைபெற்ற பூமி பூஜையில் சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும

சேத்துப்பட்டு சலவைக் கூடம் ரூ. 24 கோடியில் மறுசீரமைப்பு

சேத்துப்பட்டு சலவைக் கூடத்தை மேம்படுத்தும் பணியை சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை சேத்துப்பட்டில் 1.3 ஏக்கா் பரப்பளவில் உள்ள சலவைக் கூடம் ரூ.24.05 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது. இதில் 150 சலவைக் கற்கள், 162 சேமிப்பு அறைகள், நீரேற்று அறை, நீா்தேக்கத் தொட்டி, ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக கழிப்பறை, வாகன நிறுத்தும் வசதியுடன் 9,550 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டுமானத்துடன் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் எழும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ. பரந்தாமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com