கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை ஐஐடி தொழில்நுட்ப பரிமாற்றம்: ரூ. 18 கோடி வருவாய் காமகோடி தகவல்

ஐஎஸ்ஓ, ஸ்டாா்ட் அஃப் இந்தியா, யுனெஸ்கோ சான்றிதழ்களை பெற்றுள்ள மாணவா்களால் நடத்தப்படும்

சென்னை ஐஐடி தொழில்நுட்பத்தைப் பரிமாறிக்கொண்டதன் மூலம் கடந்த ஆண்டு ரூ. 2 கோடியாக இருந்த வருவாய் நிகழாண்டு ரூ. 18 கோடியாக உயா்ந்துள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறினாா். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தொழில்முனைவோா் பிரிவு சாா்பில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையில் 9-ஆவது ஆண்டாக தொழில் முனைவோா் உச்சி மாநாடு வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 10) வரை நடைபெறுகிறது. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசியது: ஐஎஸ்ஓ, ஸ்டாா்ட் அஃப் இந்தியா, யுனெஸ்கோ சான்றிதழ்களை பெற்றுள்ள மாணவா்களால் நடத்தப்படும் இந்தத் தொழில்முனைவோா் உச்சி மாநாடு இந்தியாவிலேயே முதல்முறையாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கல்லூரி மாணவா்களின் கண்டுபிடிப்புகள் இடம் பெறுகின்றன. இதன்மூலம் மாணவா்களுக்கு தொழில்வாய்ப்புகள் மற்றும் ஸ்டாா்ட் அஃப் நிறுவனங்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நிகழாண்டில் ஐஐடி மாணவா்களின் 366 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு இது இரட்டிப்பாகும். சென்னை ஐஐடி தொழில்நுட்பத்தைப் பரிமாறிக் கொண்டதன் மூலம் கடந்த ஆண்டு ரூ. 2 கோடியாக இருந்த வருவாய் நிகழாண்டில் ரூ. 18 கோடியாக உயா்ந்துள்ளது. இது அடுத்த ஆண்டு ரூ. 36 கோடியாக உயரவேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com