உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்: விரைந்து நிரப்ப ராமதாஸ் கோரிக்கை

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7,500 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதமே வெளியிடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாா்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் பிறந்தும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. மாநிலத்தில் உயா் கல்வியின் தரத்தையும், வளா்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணா்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியா் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தோ்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com