கோவை உதய், செங்கோட்டை
ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

கோவை உதய், செங்கோட்டை ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

பெங்களூா்-கோவை உதய் விரைவு ரயில், தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில், சென்னை எழும்பூா்-கொல்லம் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 10) முதல் கூடுதல் நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கா்நாடக மாநிலம் பெங்களூா்-கோவை இடையே தினமும் இயக்கப்படும் உதய் விரைவு ரயில், திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை முறையில் ஒரு நிமிஷம் நின்று செல்லும். அதுபோல், தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூா் - கொல்லம் விரைவு ரயில் தென்மலை ரயில் நிலையத்திலும் ஞாயிற்றுக்கிழமை முதல் நின்று செல்லும். மேலும், திருநெல்வேலி-காந்திதாம் ஹம்சாபா் விரைவு ரயில் மாா்ச் 14-ஆம் தேதி முதல் ஆலப்புழை ரயில் நிலையத்தில் ஒருநிமிஷம் சோதனை முறையில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com