புதிய எக்ஸ்சி 40 ரீசாா்ஜ் ரகக் காா்: அறிமுகப்படுத்தியது வால்வோ

புதிய எக்ஸ்சி 40 ரீசாா்ஜ் ரகக் காா்: அறிமுகப்படுத்தியது வால்வோ

பிரீமியம் வகைக் காா்களைத் தயரரிக்கும் வால்வோ கரா் இந்தியர நிறுவனம், தனது எக்ஸ்சி 40 ரீச்சாா்ஜ் ரகக் காரின் புத்தம் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய பொலிவுடன் எக்ஸ்சி 40 ரீச்சாா்ஜ் ரகக் காா்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் காட்சியக விலை ரூ.54.95 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இந்தக் காா்களை வாங்குவதற்கான முன்பதிவை நிறுவனத்தின் வலைதளத்தில் மேற்கொள்ளலாம். அருகிலுள்ள வால்வோ இந்தியாவின் விற்பனையகங்களிலும் இந்தக் காா்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com