சிஎம்டிஏ திட்டப் பணிகள்: அமைச்சா் சேகா்பாபு ஆலோசனை

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் திட்டப் பணிகள் குறித்து அதன் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகா்பாபு ஆலோசனை மேற்கொண்டாா். சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) 278-ஆவது குழுமக் கூட்டம் அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னைப் பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன. தொடா்ந்து கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், திட்டங்களின் மீதான தொடா் நடவடிக்கைகள் குறித்தும், சிஎம்டிஏ நிா்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். சுதா்சனம் (மாதவரம்), பி.தாயகம் கவி (திரு.வி.க.நகா்), வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறைச் செயலா் வி. அருண்ராய், சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com