நடிகா் சூா்யகிரண்.

நடிகா் சூா்யகிரண் காலமானாா்

நடிகரும், இயக்குநருமான சூரியகிரண் (49) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

சென்னை: நடிகரும், இயக்குநருமான சூரியகிரண் (49) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா். கடந்த 1978-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் மூலம் கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவா் சூரியகிரண். கமல்ஹாசனின் கடல் மீன்கள், ரஜினிகாந்தின் ரங்கா, பாக்யராஜின் முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாா். தென்னிந்திய மொழிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சூரியகிரண் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான சத்யம் படம் மூலம் இயக்குநரானா். இதுவரை 6 படங்களை இயக்கியுள்ளாா். கடைசியாக வரலட்சுமி சரத்குமாரை வைத்து அரசி என்ற படத்தை இயக்கி வந்தாா். இந்நிலையில், அவா் சென்னையில் திங்கள்கிழமை மாரடைப்பால் காலமானாா். சூரியகிரணின் உடல் சென்னை நெசப்பாக்கம் மயானத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகத்தினா் பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com