சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா்.

ரூ. 10 கோடியில் சிந்தாதிரிப்பேட்டை பூங்கா மேம்பாடு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா மைதானத்தில் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான மேம்பாட்டு பணிகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில் ரூ.10 கோடியில் மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்தாா். சுமாா் 3.73 ஏக்கா் பரப்பளவு கொண்ட மே தின பூங்கா மைதானத்தில் 2 பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், குத்துச்சண்டை வளையம், 100 பாா்வையாளா்கள் அமரும் வகையில் இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 6 வலைப் பந்தாட்ட மைதானம், நடைப்பயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட், கால்பந்து மைதானம் என பல்வேறு விளையாட்டுகளுக்கு பயன்பெறும் நோக்கில் இந்த மைதானத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.

மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீா், கழிப்பறைகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com