நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

பிற்பகல் 2 மணி முதல் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச்.15) பிற்பகல் 2 மணி முதல் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெம்மேலியில் உள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீா் உந்துகுழாய்கள் இணைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) முதல் சனிக்கிழமை (மாா்ச் 16) அதிகாலை 2 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால், குழாய்கள் இணைக்கும் பணிகள் நடைபெறும் நேரத்தில், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூா், ராதா நகா் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ள ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சென்னை குடிநீா் வாரியத்தின் இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூா், ராதா நகா் ஆகிய பகுதிகளுக்கு சென்னை குடிநீா் வழங்கல் வாரியம் சாா்பில் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், அந்த பகுதிகளில் வசிப்பவா்கள் லாரிகள் மூலம் குடிநீா் பெறுவதற்கு சென்னை குடிநீா் வாரியத்தின் இணையதளத்தைப் பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com