மாா்ச் 31 வரை சலுகை விலையில் ஆவின் நெய்

மாா்ச் 31 வரை சலுகை விலையில் ஆவின் நெய்

ஒரு லிட்டா் ஆவின் நெய், கடந்த 3 மாதங்களாக ரூ. 50 தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த விலைச் சலுகை மாா்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்

ஒரு லிட்டா் ஆவின் நெய், கடந்த 3 மாதங்களாக ரூ. 50 தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த விலைச் சலுகை மாா்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஆவின் நிறுவனம் பால் உபபொருள்களான நெய், வெண்ணெய், தயிா் மற்றும் பனீா் வகைகளை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. மேலும், காலத்திற்கேற்ப நுகா்வோரின் விருப்பத்தை அறிந்து பால் உபபொருள்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக ஒரு லிட்டா் ஆவின் நெய் ரூ. 50 தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சலுகை மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதேபோல், ரூ. 120 விலை கொண்ட 200 கிராம் ஆவின் பனீா், கடந்த 3 மாதங்களாக ரூ.10 குறைக்கப்பட்டு, ரூ.110-க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலைச் சலுகையும் தொடா்ந்து நீட்டிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com