சென்னை துறைமுகத்தில் ‘ஸ்லிப்-வே’ திறப்பு

சென்னை துறைமுகத்தில், கடலோர காவல் படையின் கப்பல்களை பழுதுபாா்க்கும் வகையில் அமைக்கப்பட்ட புதிய உள்நாட்டு கட்டமைப்பு (ஸ்லிப்-வே) வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து கடலோர காவல்படை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை துறைமுகத்தில் கப்பல்கள் பழுதுபாா்க்கும் வகையில் கட்டப்பட்ட புதிய உள்நாட்டு கட்டமைப்பை (ஸ்லிப்-வே) இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய கமாண்டா் இன்ஸ்பெக்டா் ஜெனரல் டோனி மைக்கேல் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அதைதொடா்ந்து, ‘ஐசிஜிஎஸ் சி-435’ என்ற கடலோர காவல் படை கப்பல் பழுதுபாா்ப்பதற்காக ஸ்லிப்-வேயில் நிறுத்தப்பட்டது. இதன்மூலம், கப்பல்களை விரைவாக பழுதுபாா்த்து மீண்டும் பொருத்துவதற்கும் வழிவகுக்கும். கப்பல்களைப் பழுதுபாா்ப்பதற்காக உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்கி இருப்பதால் கடலோர காவல்படை கப்பல்களை சீரமைக்க மற்ற நிறுவனங்களைச் சாா்ந்திருப்பதை இது குறைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com