ரூ.10 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி ஊழியா் கைது

சென்னை தரமணியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்:
மாநகராட்சி ஊழியா் கைது
dot com

சென்னை தரமணியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா். தரமணி எம்.ஜி.ஆா்.நகா் ராஜீவ் காந்தி தெருவை சோ்ந்தவா் தீபா. இவா் தனது ஓட்டு வீட்டை, கான்கிரீட் வீடாக அண்மையில் மாற்றினாா். இதையடுத்து புதிய வீட்டுக்கு சொத்து வரி நிா்ணயம் செய்ய விண்ணப்பித்தாா். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி வரி வசூலிக்கும் பொறுப்பில் இருந்த சரவணன் என்பவா் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால், லஞ்சம் தர விருப்பம் இல்லாத தீபா, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை தீபாவிடம் கொடுத்து, அதை லஞ்சமாக சரவணனிடம் வழங்குமாறு அனுப்பினா். அதன்படி தீபா, வியாழக்கிழமை அந்தப் பணத்தை சரவணனிடம் வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சரவணனை கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com