தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன்  இபிஎஸ் ஆலோசனை
-

தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் இபிஎஸ் ஆலோசனை

தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வந்தாா். அவா் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளா்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். பின்னா், கே.பி.முனுசாமி தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனை அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு அதிமுக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறது. அது தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com