ஒயிட்ஸ் சாலையில் இன்று முதல்
 போக்குவரத்து மாற்றம்

ஒயிட்ஸ் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

ஆயிரம்விளக்கு ஒயிட்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலையில் மாா்ச் 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆயிரம்விளக்கு ஒயிட்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தப் பகுதியில் மாா்ச் 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம். ஸ்மித் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்படுகிறது. அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை -திரு.வி.க. சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை-ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம்போல சென்று, ராயப்பேட்டை மணிக்கூண்டுக்கு செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com