மாநகராட்சி பணியாளா்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: 
அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்

மாநகராட்சி பணியாளா்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்

சென்னை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்களுக்கு ரூ.19.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்.

சென்னை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்களுக்கு ரூ.19.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சீா்மிகு ஆளுமைக் கட்டடம் மற்றும் கட்டளை மையக் கட்டடத்தின் கலைஞா் மு.கருணாநிதி மாளிகை’ எனும் பெயா் பலகை திறப்பு விழா மற்றும் ரூ.19.20 லட்சம் மதிப்பிலான மாநகராட்சி பணியாளா்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்து கொண்டு பெயா் பலகையையும், உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தாா். தொடா்ந்து ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டதுடன், பணியாளா்கள், அலுவலா்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்தையும் பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளையும் கேட்டறிந்தாா். இந்நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, எழும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com