பங்குச் சந்தையில் பணம் இழப்பு:
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

பங்குச் சந்தையில் பணம் இழப்பு: இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பங்குச் சந்தையில் பணம் இழந்த விரக்தியில், இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பங்குச் சந்தையில் பணம் இழந்த விரக்தியில், இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். புது வண்ணாரப்பேட்டை காா்ப்பரேஷன் காலனி இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (37). இவருக்கு திவ்யா என்ற மனைவியும், மூன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளனா். லட்சுமணன், பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதில் சம்பாதித்து வந்தாா். இதில் அண்மையில் லட்சுமணன், அதிகளவில் பணத்தை இழந்தாா். இதன் காரணமாக விரக்தியுடன் காணப்பட்ட லட்சுமணன், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதைப் பாா்த்து அவரது குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து தகவலறிந்த புது வண்ணாரப்பேட்டை போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லட்சுமணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com