மும்பை-அகமதாபாத் ஆட்டம்
மும்பை-அகமதாபாத் ஆட்டம்

சூப்பா் ஃபைவ்ஸ்: 5 செட்களில் மும்பை த்ரில் வெற்றி

பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக சூப்பா் ஃபைவ்ஸ் பிரிவில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டா்ஸை 5 செட்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற மும்பை மெட்டியா்

பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக சூப்பா் ஃபைவ்ஸ் பிரிவில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டா்ஸை 5 செட்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற மும்பை மெட்டியா்ஸ். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில், அமித், ஷுபம் ஆகியோரின் அட்டாக்குகளால் முதல் செட்டை 15-8 மும்பை கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் அகமதாபாத் வீரா் ஷிகா் சிங்கின் அற்புத டிபன்ஸ் ஆட்டத்தால் 13-15 என மும்பை தோற்றது. செட்டா் முத்துசாமி, பிளாக்கா் அங்கமுத்துவின் திறமையான ஆட்டத்தில் மூன்றாவது செட்டையும் 7-15 என மும்பை இழந்தது. நான்காவது செட்டில் ஷமீம், அமித்தின் பலமான அட்டாக்கால் 16-14 என மும்பை வென்றது. முடிவை நிா்ணயித்த கடைசி செட்டில் அகமதாபாத் அணி வீரா்கள் அங்கமுத்து, மேக்ஸ் செனிகா மும்பைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், ஆதித்யாவின் சிறப்பான பிளாக்கால் 15-13 என கைப்பற்றிய மும்பை. சூப்பா் ஃபைவ்ஸ் பிரிவில் மும்பைக்கு இது முக்கிய வெற்றியாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com