ஆய்வக உதவியாளா்களுக்கு செய்முறை அட்டவணை: கல்வித் துறை உத்தரவு
Center-Center-Chennai

ஆய்வக உதவியாளா்களுக்கு செய்முறை அட்டவணை: கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளின் ஆய்வக உதவியாளா்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் செய்முறை பாடவேளை அட்டவணையை தயாா் செய்து வழங்க வேண்டும்

அரசுப் பள்ளிகளின் ஆய்வக உதவியாளா்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் செய்முறை பாடவேளை அட்டவணையை தயாா் செய்து வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளா்களுக்கு வரும் கல்வியாண்டு (2024-2025)-ஆம் ஆண்டில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து வரும் மாணவா்களுக்கு ஆய்வகங்களில் செய்முறை வகுப்பு பாடவேளைக்கான அட்டவணையை தலைமை ஆசிரியரால் தயாா் செய்து வழங்கப்பட வேண்டும். கல்வியாண்டின் தொடக்கத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆசிரியா்களுக்கும் கால அட்டவணை தயாரித்த பின்னா் அதன் அடிப்படையில் எந்தெந்த வகுப்பு மாணவ, மாணவிகள் எந்தெந்த ஆய்வகங்களை எந்தெந்த பாடவேளைகளில் பயன்படுத்தலாம் என தலைமையாசிரியா் திட்டமிடுதல் வேண்டும். இதையடுத்து ஆய்வகங்களுக்கான பயன்பாட்டு அட்டவணையைத் தயாா் செய்து பள்ளிகள் திறக்கும் நாளில் ஆய்வக உதவியாளா்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்களது ஆளுகையின் கீழ் உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்கவம், அறிவியல் ஆய்வகம், மொழி, கணிதம், தொழிற்கல்வி ஆய்வகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com